தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இந்தியாவின் வளர்ச்சியில் அப்துல்கலாமின் பங்கு அளப்பரியது' - ராஜ்நாத் சிங்! - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்தியாவின் விண்வெளி வளர்ச்சியில் அப்துல் கலாமின் பங்கு அளப்பரியது எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியாவின் வளர்ச்சியில் அப்துல் கலாம் பங்கு அளப்பரியது -ராஜ்நாத் சிங்!

By

Published : Oct 15, 2019, 4:15 PM IST


இந்தியாவின் மிசெல் மேன் அப்துல் கலாமின் 88ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இராணுவ தளபதி பிபின் ராவத், விமானப்படை தலைவர் மார்சர், கப்பற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங் உள்ளிட்டவர்கள் அப்துல் கலாமின் சிலைக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

அப்துல்கலாம் சிலைக்கு மாலை அணிவித்த ராஜ்நாத் சிங்!

விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியாவின் சிறந்த ஆராய்ச்சியாளரை, அவரது பிறந்த நாளில் நினைவுகூர்வதில் பெருமிதம் கொள்கிறேன். உலகத் தரத்திற்கு இந்தியாவின் பெருமையை எடுத்துச் சென்றதில் அப்துல்கலாமும் ஒருவர் ஆவார். குறிப்பாக விண்வெளித் துறையில் அவரது ஆராய்ச்சி இந்தியாவின் வளர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தியது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details