தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ப.சிதம்பரம் தாக்கல்செய்த முன்ஜாமின் மனுவில் குறைபாடு - chidambarm inx media case

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் அளித்துள்ள முன்ஜாமின் மனுவில் குறைபாடு உள்ளதாகவும் அதை சரிசெய்து மீண்டும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

p chidambaram

By

Published : Aug 21, 2019, 4:38 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தேடிவருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் அளிக்குமாறு ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை இன்று காலை அணுகினார்.

பின்னர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, அவரது மனுவை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இதை அவரச வழக்காக விசாரணை செய்ய மாட்டேன் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். மேலும், ப.சிதம்பரம் அளித்த மனுவில் குறைபாடு இருப்பதாகவும் அதனை சரிசெய்து மீண்டும் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details