மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் மூன்று மாடி குடியிருப்புக் கட்டடம் இருந்தது. அந்தக் கட்டடத்தில் 40 வீடுகளில் சுமார் 150 பேர் வசித்து வந்துள்ளனர். கடந்த திங்கள் அன்று அதிகாலை 3.40 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து அறிந்து காவல் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட குடியுருப்புவாசிகளை மீட்கும் பணியில் தீவரமாக தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். அதில் 25 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டும் உள்ளனர். கட்டட விபத்திற்கு காரணமாக இருந்த இரண்டு அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.