பிகார் மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் அக்கியுட் என்சிபாலிட்டிஸ் சிண்ட்ரோம் (Acute Encephalitis Syndrome) எனப்படும் மூளைக் காய்ச்சல் பரவிவருகிறது. நாளுக்கு நாள் இந்த நோயால் அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த காய்ச்சலில் பெரும்பான்மையாக உயிரிழந்தது குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூளைக் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 117ஆக உயர்வு! - Bihar
பாட்னா: பிகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 117 பேர் உயிரிழந்துவிட்டார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
Acute Encephalitis Syndrome
நேற்று 112 பேராக இருந்த பலி எண்ணிக்கை இன்று 117 பேராக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் மனோகர் பிரதாப் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கு மனு தீபக் குப்தா, சூர்யா காந்த் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் ஜூன் 24ஆம் தேதி வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Jun 20, 2019, 10:49 AM IST