மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக புனேவில் உள்ள சங்கிலி, கொல்ஹாபூர், சதரா, சோலாபூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் இரவு, பகல் பாராது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு! - வெள்ளம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது என, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், பெண்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகளின்போது 3 பேர் காணாமல்போயினர். தேசிய பேரிடர் பாதுகாப்பு குழுவினர் இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 226 பேரை பத்திரமாக மீட்டு 596 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.