தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப்பில் போலி மதுபானங்கள் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104ஆக உயர்வு!

சண்டிகர்: போலி மதுபானங்கள் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தர்ன் தரன் மாவட்டத்தில் மட்டும் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

Death toll in Punjab hooch tragedy rises to 104
Death toll in Punjab hooch tragedy rises to 104

By

Published : Aug 3, 2020, 2:09 AM IST

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது போலி மதுபான கலாசாரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை வாங்கி அருந்தி மதுப்பிரியர்கள் பலரும் தங்களது உயிர்களை மாய்த்துக்கொள்கின்றனர். அமிர்தசரஸ், தர்ன் தரன், படாலா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 104 மேற்பட்டோர் போலி மதுபானங்கள் அருந்தி உயிரிழந்துள்ளனர். தர்ன் தரனில் மட்டுமே 75 பேர் இறந்துள்ளனர்.

இச்சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமில்லாமல், போலி மதுபானங்கள் தயாரிப்பதைக் கவனிக்கத் தவறிய ஆறு காவல் துறையினரும், ஆறு கலால் துறையினரும் பணியிடைநீக்கம் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

போலி மதுபான விற்பனை பல்வேறு பகுதிகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் மாநில காவல் துறை தீவிர விசாரணை, அதிரடி சோதனை என துரிதமாகச் செயல்பட்டுவருகின்றனர்.

அதன்படி மூத்த காவல் துறை அலுவலர்களைத் தலைமையாகக் கொண்ட ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, 40 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எட்டு பேரை கைதுசெய்து, அவர்களிடமிருந்து போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய கலன்கள், ரசாயனங்கள், போலி மதுபானங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராக ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பல்வேறு இடங்களில் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளன.

இதையும் படிங்க:'மது என்ன அத்தியாவசிய பொருளா வீடு வீடாக விநியோகம் செய்ய'- உச்சநீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details