உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் பலுபூர் என்ற கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சி ஒன்றில் கள்ளச்சாராயம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பலர்குடித்து இருக்கின்றனர். அதனையடுத்து சாராயம் குடித்தவர்கள் பலரும் மயங்கி விழுந்தனர். இதனைத் தொடா்ந்து சாராயம் அருந்திய அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஒவ்வொருவராக உயிாிழக்கத் தொடங்கினர்.
கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு - உத்தரகாண்ட்
டேராடூன்: உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104-ஆக அதிகரித்துள்ளது.
pradesh
இதேபோல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சஹரன்பூா் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்தனர். தற்போது இரு மாநிலங்களிலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தில் 9,269 லிட்டர் கள்ளச்சாராயமும், உத்தரகாண்ட்டில் 1,066 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.