தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உயிரிழந்த பெண்ணின் உடல் மாற்றம்: நடவடிக்கை கோரி முதலமைச்சரிடம் மனு

புதுச்சேரி: மருத்துவமனையின் கவனக்குறைவால் கரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை வேறொருவருக்கு மாற்றி கொடுத்த சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் கணவர், முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தார்.

மருத்துவமனையின் கவனக்குறைவு: உயிரிழந்த பெண்ணின் உடல் மாற்றம்!
Pondicherry government hospital

By

Published : Aug 20, 2020, 3:22 AM IST

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ஞானசேகர். இவரது 70 வயது தாய் திடீரென வீட்டில் இறந்து போன நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தாயின் உடலை அடக்கம் செய்ய, சிபாரிசின் அடிப்படையில் வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரியிருந்தார்.

இதற்கிடையில், புதுச்சேரி வில்லியனூர் மணவெளியைச் சேர்ந்த 43 வயதுடைய குணவள்ளி என்பவர் வீட்டிலேயே இறந்த நிலையில் அவரது உடலும் கரோனா பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மருத்துவ நிர்வாகத்தின் அனுமதிக்காக தனது தாய் உடலை எடுத்துச் செல்ல காத்திருந்த காவலர், தனது தாயின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செயத்தார்.

இதையடுத்து, குணவள்ளியின் உடலை காணவில்லை என மருத்துவமனை நிர்வாகத்திடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தான் காவலர் எடுத்துச் சென்ற உடல் குணவள்ளியின் உடல் என்பது தெரியவந்தது. மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த இந்த விபரீதத்தால் குணவள்ளியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குணவள்ளியின் கணவர் யோகநாதன் நேற்று (ஆகஸ்ட் 19) தனது உறவினர்களுடன் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், தனது மனைவியின் இறந்த உடலை கவனக்குறைவால் மருத்துவமனை நிர்வாகம் வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுத்துள்ளது. இந்த தவறு நடக்க காரணமாக இருந்த மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதலைமைச்சரிடம் வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details