தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் மீண்டும் தொடங்கிய கரோனா தடுப்பு மருந்து சோதனை! - Oxford university Corona vaccine trail

டெல்லி : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கரோனா தடுப்பு மருந்து சோதனையை மீண்டும் இந்தியாவில் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

trials for COVID-19 vaccine
trials for COVID-19 vaccine

By

Published : Sep 16, 2020, 11:56 AM IST

கரோனா தொற்றுக்கு தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க உலகின் பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். குறிப்பாக பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) என்ற மருத்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருத்திற்கு உலகெங்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாதத் தொடக்கத்தில் இந்தக் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு திடீரென்று நரம்பியல் கோளாறு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்தச் சூழலில் செப்டம்பர் 12ஆம் தேதி இது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழு, தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்றும், மருத்துவப் பரிசோதனைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து பிரிட்டனில் மீண்டும் மருத்துவப் பரிசோதனை தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இந்தக் கரோனா தடுப்பு மருந்து சோதனையை மேற்கொள்ளும் சீரம் நிறுவனம், மருத்துவ பரிசோதனைகள் குறித்து பிரிட்டன் அரசின் தரவுகளையும், தரவு பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் அளித்துள்ள தரவுகளையும் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலிடம் (டிசிஜிஐ) சமர்பித்தது.

இந்தத் தரவுகளை ஆராய்ந்த டிசிஜிஐ, இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தின் மூன்றாம்கட்ட மருத்துவப் பரிசோதனைகளை மீண்டும் தொடங்க அனுமதியளித்துள்ளது.

இதையும் படிங்க: 'புரோட்டீன்' ஊட்டச்சத்தின் சூப்பர் ஹீரோ!

ABOUT THE AUTHOR

...view details