கரோனா வைரஸ் குறித்த சிறப்பு நிபுணர் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்தியாவில் லேசான மற்றும் மிதமான கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க க்ளென்மார்க் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு ஃபாவிபிராவிர் மருந்து தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
" கரோனா வைரஸால் லேசான மற்றும் மிதமான பாதிக்கப்புக்கு உள்ளாகியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக, வைரஸ் தடுப்பு மருந்தை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் செய்ய க்ளென்மார்க் மருந்து தயாரிக்கும் நிறுவனம், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு தலைமையத்திடமிருந்து ஒப்புதலைப் பெற்றுள்ளது" என்று அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
34 மாத்திரைகள் கொண்ட ஃபாவிபிராவிரின் ஒரு அட்டையின் மதிப்பு ரூ .3,500 ஆகும். கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி இந்த மருந்துகளை இரண்டு வாரங்களில் 122 மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.