நாடு முழுவதும் உள்ள அணைகளைப் பாதுகாக்க அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி நீர் பங்கீட்டு நிபுணர்கள், சர்வதேச நிபுணர்களுடன் ஆலோசனை செய்த பிறகே இந்த மசோதாவை இயற்றப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள 92 சதவீத ஆறுகள் இரு மாநிலங்களுக்கிடையே ஓடுவதால் இந்த மசோதா மிக அவசியமென மசோதாவை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் கூறியுள்ளார். மேலும், நாடு முழுவதும் உள்ள அணைகளுக்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்க இச்சட்ட மசோதாவை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த மசோதாவின் படி அணை பாதுகாப்பிற்கான கொள்கைகளை தேசிய கமிட்டி உருவாக்கும் எனவும், அதனை தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் நிறைவேற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.