தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் முதலமைச்சர் - தலாய்லாமா சந்திப்பின் பின்னணி - பிகார் முதலமைச்சர் வீட்டில் தலாய்லாமா

மக்களிடையே அமைதியும் நல்வாழ்வும் நிறைந்திட பிகார் முதலமைச்சர் வீட்டில் தலாய்லாமா பிரார்த்தனை நடத்தினார்.

Dalai Lama meets Nitish Kumar
Dalai Lama meets Nitish Kumar

By

Published : Jan 17, 2020, 9:03 PM IST

ஆண்டுதோறும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் தலாய்லாமா பிகார் மாநிலத்துக்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு வரும்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் புத்தர் ஞானமடைந்த புத் கயாவில் சொற்பொழிவுகளை ஆற்றுவார்.

இந்நிலையில், இன்று தலாய்லாமா பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் வீட்டில், மக்களிடையே அமைதியும் நல்வாழ்வும் நிறைந்திட பிரார்த்தனை நடத்தினார்.

தலாய்லாமாவுக்கு பிகார் முதலமைச்சர் வீட்டில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து முதலமைசசர் வீட்டிலுள்ள போதி மரத்தின் அருகே தலாய்லாமா பிரார்த்தனையை நடத்தினார்.

பிகார் முதலமைச்சர் வீட்டில் தலாய்லாமா

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சௌத்ரி, அமைச்சர் அசோக் சௌத்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிரார்த்தனை முடிந்த பின், முதலமைச்சர் நிதீஷ்குமார் தலாய்லாமாவுக்கு புத்தர் சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார்.

இதையும் படிங்க:'ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் படுகொலை நிகழ்த்துகின்றனர்' - பிரக்யா தாக்கூர்

ABOUT THE AUTHOR

...view details