தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..!' - ஸ்டீவ் இர்வினை பெருமைபடுத்திய மகன் - crocodile

ஆஸ்ரேலியா: பிரபல முதலைகள் ஆர்வலர் ஸ்டீவ் இர்வின் மகன் ராபர்ட் இர்வின், தனது தந்தையை பெருமைப்படுத்தும் விதமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

ஸ்டீவ் இர்வின்- ராபர்ட் இர்வின்

By

Published : Jul 4, 2019, 7:19 PM IST

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல முதலைகள் ஆர்வலரான ஸ்டீவ் இர்வின், தன் மனைவியுடன் முதலைகள் பற்றிய பல தொலைக்காட்சி ஆவணப்படங்களைத் தொடராக நடத்தியுள்ளார். இவரை மக்கள் 'முதலை வேட்டைக்காரன்' என்று செல்லமாக அழைத்தனர். இந்நிலையில், கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ம் தேதி, ஸ்டிங்ரே என்ற மீன் தாக்கி உயிரிழந்தார். அவருக்கு ராபர்ட், பிண்டி என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில், ராபர்ட் இர்வின்தான் தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை இன்ட்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஸ்டீவ் இர்வின்- ராபர்ட் இர்வின்

அந்த புகைப்படத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தை ஸ்டீவ் இர்வின் 'முர்ரே' என்ற முதலைக்கு உணவளிப்பதையும், அதே முதலைக்கு இர்வின் உணவளிப்பதையும் இணைத்து அந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு ஸ்டீவ் இர்வின் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் அந்த பதிவில் 'தந்தையும் நானும் ஒரே இடத்தில் ஒரே முதலையுடன். ஆனால், பதினைந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ராபர்ட்டும் பிண்டியும் தற்போது தங்கள் தந்தை நடத்திவந்த ஆஸ்திரேலிய வனவிலங்கு பூங்காவில் வாழ்கின்ற 1200-க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பராமரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details