தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரையைக் கடக்கவுள்ள வாயு புயல்: முன்னெச்சரிக்கையில் குஜராத்

காந்திநகர்: அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல் இன்று (ஜூன் 13) கரையைக் கடக்க உள்ளது. இந்நிலையில், குஜராத் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Vaayu

By

Published : Jun 13, 2019, 8:22 AM IST

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள வாயு புயல், குஜராத் மாநிலத்தின் போர்பந்தர், மஹீவா பகுதியில் இன்று (ஜூன் 13) மதியம் கரை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 முதல் 165 கி.மீ. வேகத்தில் வரை காற்று வீசும். இச்சமயத்தில் அரபிக்கடலை ஒட்டிய கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

இதன் காரணமாக சவுராஷ்டிரா, கட்ச் பகுதியில் வசிக்கும் 2.15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் போர்பந்தர், ராஜ்கோட் உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க குஜராத் அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது. இதற்கான உத்தரவை பிறப்பித்த அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் பாதுகாப்பு இடங்களில் தங்கவைக்கப்படும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு வசதிகள் போன்றவற்றை அரசு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிக்கு தயாராக விமானங்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள், ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள், விமானப்படை வீரர்கள் தயாராக உள்ளனர்.

அதுமட்டுமில்லாது புயல் நிவாரணம் - மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த குழுக்குகளும் தயாராக உள்ளனர். புயல் காரணமாக நான்கு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details