வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது அது இன்று புயலாக வலுவடைந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவடைந்தது 'புரெவி' புயல் சின்னம் - கனமழைக்கு வாய்ப்பு - திரிகோணமலை
டெல்லி: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த புயலுக்கு "புரெவி" என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயலானது தற்போது திரிகோணமலையிலிருந்து 530 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் காரணமாகத் தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், கேரளாவிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமிரபரணி உள்ளிட்ட சில தென் மாவட்ட நதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.