மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தார்மீக பொறுப்பெற்று அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து பலர் விலகினர்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - Congress Working Commitee
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலகியதையடுத்து, வரும் 10ஆம் தேதி நடைபெறும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் புதிய தலைவர் தேர்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், தன் முடிவில் உறுதியாக இருந்த ராகுல் காந்தி இறுதிவரை தன் முடிவை திரும்பப் பெறவில்லை. இந்நிலையில் அடுத்த தலைவரை தேர்ந்தேடுக்க காங்கிரஸ் கட்சி தாமதப்படுத்திவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதைதொடர்ந்து அக்கட்சியின் செயற்குழு வரும் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேரு குடும்பத்தை அல்லாத ஒருவரை தேர்ந்தெடுக்க ராகுல் ஆலோசனை கூறியதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கே, சுசில் குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர் காங்கிரஸ் வட்டாரங்களில் கசியவிடப்பட்டுள்ளது.