மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆரே வனப்பகுதியில், மெட்ரோ பணிமனைக்காக அங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரே காலனி மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "உலகத்திலேயே மெட்ரோ சேவை டெல்லியில் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெல்லி மெட்ரோ கட்டப்படுவதற்கு பல மரங்கள் வெட்டப்பட்டன, ஆனால் தற்போது மெட்ரோ கட்டப்பட்டு 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அதனை அன்றாடம் உபயோகித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இரண்டுமே நாட்டினை மேம்படுத்தும். நாட்டின் வளர்ச்சிக்காக இரண்டும் சரிசமமான அளவிலேயே கொண்டு செல்லப்படுகிறது.