போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு தொடா்பாக கன்னடத் திரைக்கலைஞா்கள் உள்ளிட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதில், ராகுல் ஷெட்டி, ரவிசங்கா், விரேன் கன்னா, நடிகை ராகினி துவிவேதி, நடிகை சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட பல பெரும் புள்ளிகள் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க செப்டம்பர் 14ஆம் தேதிவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைகிறது.