காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே, அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்களை, அம்மாநில காவல் துறையினர் வெளியேற்றிவருகின்றனர். காரணம் எதுவும் சொல்லப்படாமல் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுவருவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை-விடுத்துள்ளார்.
வலுக்கும் காஷ்மீர் பிரச்னை; விவாதிக்குமா மத்திய அமைச்சரவை? - அமைச்சரவை கூட்டம்
டெல்லி: நாளை பிரதமர் மோடியின் இல்லத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதில் காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
Cabinet Meeting
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை பிரதமரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உன்னாவ் வழக்கு குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.