தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய ஆயுத காவல் படை வீரர் ஒருவருக்கு கரோனா - COVID-19 cases in India

டெல்லி: மத்திய ஆயுத காவல் படை வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

CRPF jawan tests positive for COVID-19; admitted to Delhi hospital
CRPF jawan tests positive for COVID-19; admitted to Delhi hospital

By

Published : Apr 22, 2020, 3:39 PM IST

ஜம்மு காஷ்மீர் எல்லையில் செவிலியரின் உதவியாளராக மத்திய ஆயுத காவல்படை வீரர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து, தனது பணிக்காலம் முடிந்த பிறகு அவர் விடுப்புக்காக டெல்லி திரும்பினார்.

இந்த நிலையில், விடுப்பு முடிந்தவுடன் அவர் மீண்டும் பணியில் சேருவதற்கு முன் கரோனா பரிசோதனை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், அவரது மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள தனிநபர் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:வேலை பார்க்க சொன்ன உதவி ஆய்வாளரைத் தாக்கிய காவலர்

ABOUT THE AUTHOR

...view details