கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றது. இதன் ஒரு பகுதியாக, பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுக்கும் நோக்கில், இன்று மாலை 9 மணி முதல் மார்ச் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுள்ளது.
இந்த உத்தரவின்படி, அத்தியாவசியப் பொருள்கள் தவிர பிற கடைகள் திறக்கப்படாது. புதுச்சேரி முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. இதனால் மதுபானக்கடைகளின் விற்பனையாளர்கள் திணறினர்.