டெல்லி:நடைபெற்றுவரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் தங்களது குற்றப் பிண்ணனியை முறையாகத் தெரிவிக்கவில்லை என டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரஜேஷ் சிங் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதில், வேட்பாளர்களின் குற்றப் பிண்ணனியை முறைவர வெளியிட முற்படாத தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் பாஜக உறுப்பினருமான அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பிண்ணனியை மக்களுக்குத் தெரிவித்தவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது குற்றப் பிண்ணனியினை வேட்பு மனு தாக்கல் செய்த முதல் இரண்டு வாரத்திற்குள்ளோ, அல்லது தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னரோ உள்ளூர் பத்திரிகைகள், தொலைகாட்சிகளில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.