2019 ஜூன் 9ஆம் தேதி தலைமை புலனாய்வு ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து, கே.வி. சௌத்திரி ஓய்வுபெற்றார். அதற்குப் பிறகு, இந்தப் பதவியில் யாரும் நியமிக்கப்படாமல் காலியாக இருந்தது. இந்திய குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த சஞ்சய் கோத்தாரி தற்போது இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். மத்திய தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்த சுதீர் பார்கவ் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தில் பிமல் ஜூல்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமரின் தலைமையிலான தேர்வுக்குழு இந்த ஆணையங்களுக்கான தலைவர்களை தேர்வு செய்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியலை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு பிரதமர் வலியுறுத்தியும், அது செய்யப்படவில்லை. இது இந்தப் பணி நியமனத்தில் நடந்த முதல் ஆட்சேபனையாக கருதப்படுகிறது .
இரண்டாவதாக, இந்தப் பதவிகளுக்கு தகுதி வாய்ந்தவர்களை அடையாளம் காண நியமிக்கப்பட்டவர்களின் பெயர்கள் இறுதிப்பட்டியலில் இடம் பெற்றிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்திரி, பல முறை ஆட்சேபனை தெரிவித்தும், மத்திய அரசின் ஆதரவுடன் இந்தப் பணி நியமனங்கள் நடைபெற்றுள்ளன. நீங்கள் என்னதான் நேர்மையான அதிகாரிகள் அடங்கிய பட்டியல் தயாரித்தாலும் அரசு டிக் செய்தவர்கள்தான் நாட்டின் முக்கிய அமைப்புகளின் தலைவர் பதவியில் அமர்வார்கள் என்றால் இப்படியொரு தேர்வுக்குழு தேவையா? என்கிற கேள்வியும் எழுகிறது.
கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரிஷிகுமார் சி.பி.ஐ அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது, ஊழல் வழக்குகளை நல்ல முறையில் விசாரிக்க தெரியாதவர் ரிஷி குமார் என்றும் அவர் விசாரித்த ஊழல் வழக்குகளின் அடிப்படையில், இந்த குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாகவும் விமர்சனம் எழுந்தது. தங்கள் பதவியின் கண்ணியத்தையும் நேர்மையையும் காப்பாற்றும் அதிகாரிகளை விட அப்படியில்லாதவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பல காரணங்கள் உள்ளன.
இதனால்தான் தேர்வுமுறைகள் பெரும்பாலும் கேலிக்குள்ளாகின்றன. இது போன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நிலைமையை சீர் செய்ய முயன்றாலும், அரசியல் கட்சிகள் தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில் நாட்டின் முக்கியமான அமைப்புகளில் சீர்கேடுகள் நிலவுவது பெரும் ஆபத்தில் முடியும். . அரசியலில் ஊழல் மலிவடைய தொடங்கிய காலத்தில் இருந்து இத்தகையை சீர்கேடுகள் உருவாகத் தொடங்கியுள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டு, 'ஒருவருக்கு ஆளும் கட்சியின் ஆதரவு இருந்தால், அவர்கள் நாட்டின் ஏதாவது முக்கிய அமைப்புகள் காக்கத் தொடங்கி விடும். இது நாட்டின் ஒற்றுமை மற்றும் அரசியல் சூழ்ச்சி செய்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது' என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குறிப்பிட்டுள்ளார். யு.பி. ஏ (காங்கிரஸ் கூட்டணி கட்சி) ஆட்சிக் காலத்தில் தேர்தல் ஆணையத் தலைவராக நவீன் சாவ்லா நியமிக்கப்பட்ட போது கடும் சர்ச்சை எழுந்தது குறித்து அனைவருக்கும் தெரியும்.
அப்போதைய, தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி, இந்திய குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், 'ஆளும் கட்சியுடன் உள்ள தொடர்பு காரணமாக தவறான செயல்களில் நவீன் சாவ்லா ஈடுபடுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் ரகசியத்தகவல்களை அவர்களிடத்தில் சொல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுபோன்ற விஷயத்தை கருத்தில் கொண்டுதான் பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் நாட்டின் சட்ட அமைச்சர் அடங்கிய கொலிஜியம்தான் நாட்டின் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டுமென்று அத்வானி பரிந்துரைத்தார். பிறகு, மன்மோகன் சிங் காலத்தில் நாட்டின் புலனாய்வு அமைப்பின் தலைவராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்பட்டார்.