மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தியிருக்கிறது. கடந்த 20ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் கொரோனா குறித்து கவலைப்பட்டு வரும் சூழ்நிலையில் மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மக்களுக்கு அநீதி இழைக்கும் செயல் என சிபிஎம் கட்சி கேரள மாநிலத்தின் செயலர் கொடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆளும் கட்சிக்கு மக்கள் குறித்து எந்த அக்கறையும் இல்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு வலுவான கண்டனத்தைப் பதிவுசெய்த அவர், உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக ரத்து செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.