தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களோடு மக்களாக இணைந்த ராகுல் காந்தி - Rahul Gandhi interacts with taxi driver in Delhi

டெல்லி: கரோனாவால் ஏற்பட்டு பாதிப்புகளை தெரிந்துகொள்வதற்காக சாலையில் இறங்கிய ராகுல் காந்தி, டாக்ஸி ஓட்டுநர் ஒருவருடன் கலந்துரையாடினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : May 25, 2020, 2:06 PM IST

கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடி பல்வேறு தரப்பினரை பாதித்துள்ளது. குறிப்பாக, வெளிமாநில தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்துவருகின்றனர். ஆயிரம் கிலோமீட்டர் தள்ளியுள்ள தங்கள் மாநிலத்துக்கு நடந்து செல்லும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். இதனிடையே, சுக்தேவ் விஹார் மேம்பாலம் அருகே பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

வெளிமாநில தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி உரையாடிதை ஆவணப்படமாக காங்கிரஸ் வெளியிட்டது. அவர்களுக்கு நீதி கேட்கும் வகையில் ஆவணப்படம் அமைந்திருந்தது. இந்நிலையில், டாக்ஸி ஓட்டுநர் ஒருவருடன் ராகுல் காந்தி உரையாடினார்.

ஊபர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பரமானந்த் என்பவரிடம், அவரின் குறைகள் குறித்து ராகுல் கேட்டறிந்தார். கரோனா வைரஸ் நோயால் பாதிப்புக்குள்ளான டாக்ஸி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியம் ஓட்டுநர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. மற்றொரு டாக்ஸி நிறுவனம் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், 35 விழுக்காடு ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரத்துக்கு தொடர்ந்து குரல் கொடுக்கும் ராகுல் காந்தி, நலிவடைந்த 13 கோடி குடும்பங்களுக்கு நேரடி பணப்பரிமாற்றம் மூலம் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 'சொந்த மாநிலத்தின் தேவையைப் பிரதமர் பூர்த்தி செய்யவில்லை'

ABOUT THE AUTHOR

...view details