கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் 80 விழுக்காடு ஐ.சி.யூ படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரித்து வந்தது.
டெல்லி அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், கரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் இரண்டு வாரங்களுக்கு படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய டெல்லி அரசு முடிவு எடுத்துள்ளதாகவும், அதன் பின்னர் நிலைமையைப் பொறுத்து, இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
டெல்லி அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தனது வாதத்தில், “மாநிலத்தில் உள்ள 33 தனியார் நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டுமே ஐசியு படுக்கைகளில் 80 விழுக்காடு கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது என்று கருத டெல்லி உயர் நீதிமன்றம் தவறிவிட்டது” என்று கூறியுள்ளது.
டெல்லி அரசின் மேல்முறையீட்டில் நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றும், குறிப்பாக கரோனா தொற்றுநோய் சூழல், பொது நலனைக் கருத்தில்கொண்டு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தை கடந்துள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது.