மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் நகரைச் சேர்ந்த 55 வயது நபருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது.
இதையடுத்து, அவர் அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது, தன்னை விடுவிக்கக் கோரி வாகனத்தை நிறுத்துமாறு ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். ஓட்டுநரும் வாகனத்தை நிறுத்த இவர் ஆம்புலன்ஸிலிருந்து தப்பித்து அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார். இச்சம்பவம் நேற்று (ஆக.2) இரவு ஒன்பது மணியளவில் நடந்ததாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
பின்னர் இச்சம்வம் தொடர்பாக ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஜோர்பங்கலோ (Jorebungalo) காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்குள் தப்பியோடிய நபரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து காவலர்கள் கூறுகையில், காட்டுக்குள் தப்பியோடியவர், மனைவியை கொன்ற வழக்கில் பரோலில் வெளியேவந்தவர் ஆவார்” என்றனர்.
மனைவியை கொன்ற வழக்கில், பரோலில் வெளிவந்த நபருக்கு கரோனா இருப்பது உறுதியானதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலிருந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:பஞ்சாப்பில் போலி மதுபானங்கள் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 104ஆக உயர்வு!