தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கோவிட் கறி... மாஸ்க் நாண்...' ஒரு பிடி பிடிக்கும் சாப்பாட்டுப் பிரியர்கள்!

ஜெய்ப்பூர்: உணவகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கோவிட் கறி, மாஸ்க் நாண் உணவு வகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது‌.

கரோனா
கரோனா

By

Published : Aug 3, 2020, 2:23 PM IST

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள பிரபல உணவகம் ஒன்று, வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கரோனா தொற்று குறித்து அறியாதோர் யாரும் இருக்க முடியாததால், கரோனா பெயர் கொண்ட உணவு வகைகளை தங்களது மெனுவில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

COVID-19 வடிவத்தில் தயாரிக்கப்படும் "மலாய் கோஃப்டா" உணவிற்கு 'கோவிட் கறி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதே போல், முகக்கவச வடிவில் வெண்ணெய்யால் செய்யப்படும் நாணுக்கு 'மாஸ்க் நாண்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு கரோனா உணவு வகையும் மக்கள் விரும்பி, சாப்பிடுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து உணவகத்தின் உரிமையாளர் அனில் குமார் கூறுகையில், "மலாய் கோஃப்டா பல்வேறு வகையான மசாலா பொருள்கள் மூலம் பிரத்யேகமாக கோவிட் 19 வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மாஸ்க் கட்டாயம் என்பதால், மாஸ்க் வடிவிலான நாண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு மாஸ்க் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும். தற்போதைய நிலையில், புதிதாக ஒன்றை முயற்சித்தால் மட்டுமே மக்களை ஈர்க்க முடியும். அதன்படி, நாங்கள் கரோனா உணவை பட்டியலில் இணைத்துள்ளோம். உணவகத்தில் தகுந்த இடைவெளியையும், கிருமி நாசினி தெளிப்பதும் போன்ற சுகாதார நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றுகிறோம்.

ஒருவருக்கு ஒருவர் ஒரு இருக்கை தள்ளி அமர அறிவுறுத்தியுள்ளோம். மேலும், வாடிக்கையாளர்களுக்கு, உணவுப் பட்டியல் அளிப்பதற்குப் பதில் டிஜிட்டல் பட்டியல் தான் வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய வாடிக்கையாளர் லவீன் சோலங்கி, "கோவிட் கறி டிஷ் குறித்து தகவல் அறிந்து இங்கு வந்தேன். மாஸ்க் நாண், கோவிட் கறி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உணவகத்தின் சேவையும் பாராட்டத்தக்கது. சுத்திகரிப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுகிறார்கள்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details