தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்ச் 31 வரை முழுமையாக முடங்கும் பஞ்சாப் - முதலமைச்சர் அதிரடி!

சண்டிகர்: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மார்ச் 31ஆம் தேதி வரை முற்றிலும் முடக்கப்படுவதாக பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

Punjab CM announces complete lockdown till March 31
Punjab CM announces complete lockdown till March 31

By

Published : Mar 22, 2020, 1:51 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, மக்கள் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக பஞ்சாப் மாநிலம் வரும் 31ஆம் முற்றிலும் முடக்கப்படுவதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் அமரேந்தர் சிங் அறிவித்துள்ளார். இருப்பினும் பால், உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் தொடரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இத்தடை உத்தரவை அனைத்து காவல் துணை ஆணையர்களும், காவல் மூத்த கண்காணிப்பாளர்களும் அமல்படுத்த வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதலமைச்சரின் உத்தரவு

ஒடிசா மாவட்டத்திலுள்ள சில மாவட்டங்களிலும் இதுபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பாதிப்பு 341ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details