தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிப்ரவரியில் இரண்டாவது முறையாக 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா! - corona cases in India

டெல்லி: நேற்று ஒரே நாளில் மட்டும் 9 ஆயிரத்து 110 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 8 லட்சத்து 47 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Feb 9, 2021, 6:46 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 110 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 78ஆக உள்ளது.

இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 கோடியே 8 லட்சத்து 47 ஆயிரத்து 304ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 158 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 5 லட்சத்து 48 ஆயிரத்து 521 ஆக உள்ளது.

சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக 2 லட்சத்துக்கும் குறைவாக இருந்து வருகிறது. இதுவரை மொத்தமாக 20 கோடியே 25 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 6 லட்சத்து 87 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details