தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19 தாக்கம்: குழந்தை தொழிலாளர்கள், ஐ.நா. அச்சம்!

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) மற்றும் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்பது கோடியே 40 லட்சமாக குறைந்திருந்தது. ஆனால் தற்போது அபாய கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

child labour
child labour

By

Published : Jun 13, 2020, 7:01 PM IST

ஐக்கிய நாடுகள்: கோவிட்-19 நெருக்கடியால் இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகள் உள்பட பல நாடுகளில் உள்ள பல கோடி குழந்தைகளை குழந்தைத் தொழிலாளர்களாகத் தள்ளக்கூடும் அபாயம் உள்ளது.

இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) மற்றும் யுனிசெஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்த இவர்களின் எண்ணிக்கை, தற்போதைய சூழலால் மேலும் அதிகரிக்ககூடும்.

குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 2000ஆவது ஆண்டு ஒன்பது கோடியே 40 லட்சமாக குறைந்திருந்தது. ஆனால் தற்போது இது அபாய கட்டத்தில் உள்ளது.

உலகம் முழுவதும் ஆறு முதல் 11 வயதுடைய குழந்தைகள் சுமார் ஐந்து கோடியே 80 லட்சம் பேர் பள்ளியில் சேர்க்கப்படாமல் உள்ளனர்.

இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தலா பத்து லட்சத்திற்கும் மேலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொகுசு கார்.. 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள்.. இது என்னடா ராஜமாதாவுக்கு வந்த சோதனை!

ABOUT THE AUTHOR

...view details