நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 49 ஆயிரத்து 881 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 517 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
கோவிட்-19 தற்போதைய நிலவரம்:
இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 80 லட்சத்து 40 ஆயிரத்து 203 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 லட்சத்து 03 ஆயிரத்து 687 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 73 லட்சத்து 15 ஆயிரத்து 989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 527 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.