ஹைதராபாத்: நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 25 ஆயிரத்து 409 ஆக உள்ளது. இதனால் உலக அளவில் கரோனா பாதிப்பாளர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்துக்கு நெருங்கி வந்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் கரோனா பாதிப்பாளர்கள் பட்டியலில் ஒரு லட்சத்தை கடந்த ஆறு மாநிலங்கள் உள்ளன. அதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு அதிகபட்சமான பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதற்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸிற்கு அதிகபட்சமாக நான்கு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு 16 ஆயிரமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நான்கு ஆயிரத்து 461 உயிரிழப்புகள் மற்றும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பாதிப்பாளர்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.