தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் 45 ஆயிரத்தை தாண்டிய கரோனா உயிரிழப்புகள்! - நாட்டில் கரோனா பாதிப்பு

டெல்லி: நேற்று மட்டும் 871 பேர் கரோனாவால் உயிரிழந்ததையடுத்து, நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Aug 11, 2020, 2:15 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது.

இந்நிலையில், வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 லட்சத்து 68 ஆயிரத்து 675 ஆக அதிகரித்துள்ளது” தெரியவந்துள்ளது.

மேலும் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 45 ஆயிரத்து 257ஆக உயிரிழந்துள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் 15 லட்சத்து 83 ஆயிரத்து 489 பேர் குணமடைந்துள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

கரோனா வைரஸிற்கு அதிகப்பட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐந்து லட்சத்து 24 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக மூன்று லட்சம் பாதிப்பாளர்களுடன் தமிழ்நாடு உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details