இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று ஒரேநாளில் புதிதாக 3,604 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1230 பேருக்கும், தமிழ்நாட்டில் 798 பேருக்கும், குஜராத்தில் 347 பேருக்கும், டெல்லியில் 310 பேருக்கும் இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,756ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் நேற்று 87 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 36 பேரும், குஜராத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,293ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 1,538 பேர் இத்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22, 455ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
கரோனாவால் அதிக பாதிப்புகளான மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராதான் முதலிடத்தில் உள்ளது. இத்தொற்றின் தாக்கம் மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.