தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்கள் வாரியாக கரோனா வைரஸ் பாதிப்பு விவரம்

இந்தியாவில் கரோனா வைரஸால் 35,043 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,147 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள் வாரியாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்.

COVID-19 India tracker: State-wise report
COVID-19 India tracker: State-wise report

By

Published : May 1, 2020, 12:59 PM IST

மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,993 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், நேற்று ஒரேநாளில் 73 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 27 பேரும், குஜராத்தில் 17 பேரும் உயிரிழந்தனர். இதன்மூலம், நாட்டில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,147ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று 564 பேர் இத்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,889ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதியுடன் முடியவுள்ளது. இருப்பினும் நாட்டில் வைரஸ் பரவலின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாள்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தொற்றால் மகாராஷ்டிராவில்தான் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. அம்மாநிலத்தில் இதுவரை 10,498 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 459 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலங்கள் வாரியாக இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை பார்க்கலாம்.

மாநிலங்கள் பாதிப்புகள் உயிரிழப்புகள் குணமடைந்தவர்கள்
மகாராஷ்டிரா 10,498, 459 1,773
குஜராத் 4,395 214 613
டெல்லி 3,514 59 1,094
மத்தியப் பிரதேசம் 2,660 137 482
ராஜஸ்தான் 2,584 58 836
தமிழ்நாடு 2,323 27 1,258
உத்தரப் பிரதேசம் 2,203 39 513
ஆந்திரப் பிரதேசம் 1,403 31 321
தெலங்கானா 1,038 26 397
மேற்கு வங்கம் 795 33 139
ஜம்மு காஷ்மீர் 614 8 216
கர்நாடகா 565 21 229
கேரளா 497 4 383
பிகார் 418 2 82
பஞ்சாப் 357 19 90
ஹரியானா 313 3 209
ஒடிசா 142 1 39
ஜார்க்கண்ட் 109 3 20
உத்தரகாண்ட் 57 0 36
சண்டிகர் 56 0 17
அசாம் 42 1 29
இமாச்சலப் பிரதேசம் 40 1 28
சத்தீஸ்கர் 40 0 36
அந்தமான் நிக்கோபர் தீவுகள் 33 0 16
லடாக் 22 0 16
மேகாலயா 12 1 0
புதுச்சேரி 8 0 5
கோவா 7 0 7
திரிபுரா 2 0 2
மணிப்பூர் 2 0 2
மிசோரம் 1 0 0
அருணச்சால பிரதேசம் 1 0 1

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து ரஷ்யா பிரதமர் குணமடைய மோடி வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details