தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலங்கள் வாரியாகக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நிலவரம் என்ன? - இந்தியாவில் கோவிட்19 பாதிப்பு

டெல்லி: கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் இன்றைய நிலவரத்தைப் புள்ளிவிவர தகவல்களுடன் காண்போம்.

COVID-19 India tracker  coronavirus updates  Ministry of Health and Family Welfare  total cases  positive cases  active cases  கோவிட்-19 வைரஸ் பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக இன்றைய நிலவரம்  இந்தியாவில் கோவிட்19 பாதிப்பு  மாநிலங்கள் வாரியாக கோவிட்-19 பாதிப்பு
COVID-19 India tracker coronavirus updates Ministry of Health and Family Welfare total cases positive cases active cases கோவிட்-19 வைரஸ் பாதிப்பு: மாநிலங்கள் வாரியாக இன்றைய நிலவரம் இந்தியாவில் கோவிட்19 பாதிப்பு மாநிலங்கள் வாரியாக கோவிட்-19 பாதிப்பு

By

Published : Apr 7, 2020, 11:15 AM IST

நாடு முழுவதும் கரோனா (கோவிட்-19) வைரஸ் தொற்றுக்கு இதுவரை நான்கு ஆயிரத்து 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 114 ஆக உள்ளது. 748 பாதிப்பாளர்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், 621 பேருடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (ஏப்ரல்7) காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் கரோனா (கோவிட்19) வைரஸ் தொற்றுக்கு, 114 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 45 பேரும், குஜராத்தில் 12 பேரும், மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது பேரும், டெல்லி மற்றும் தெலங்கானாவில் ஏழு பேரும், தமிழ்நாட்டில் ஐந்து பேரும், கர்நாடகாவில் 4 பேரும், ஆந்திரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில், தலா 3 பேரும், கேரளத்தில் இரண்டு பேரும், பிகார், ஹரியானா, இமாச்சலப்பிரதேசத்தில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து மாநிலங்களின் பட்டியல். அவற்றின் விவரம் கீழே வருமாறு:

எண் மாநிலங்கள் பாதிப்பு
01 மகாராஷ்டிரா 748
02 தமிழ்நாடு 621
03 டெல்லி 523
04 கேரளா 327
05 தெலங்கானா 321
06 உத்தரப் பிரதேசம் 305
07 ராஜஸ்தான் 288
08 ஆந்திரா 266
09 கர்நாடகா 151
10 குஜராத் 144

இந்தத் தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details