நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை அலுவலர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மாநில சுகாதார அமைச்சர்களுடன் காணொலி அழைப்பு மூலம் கலந்தாலோசனையில் ஈடுபட்டு, கரோனா குறித்த மேலாண்மைப் பணிகளைக் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் ஹர்ஷ் வர்தனுடன் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி சௌபேவும் இடம்பெற்றார்.
இதில் முக்கிய மருத்துவ உபகரணங்களான PPE எனப்படும் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள், N95 முகக்கவசங்கள், வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றின் இருப்பு குறித்து கேட்டறிந்து, இவற்றை வழங்குவதில் எந்தத் தடங்கலும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்படி ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஊரடங்கைத் தொடர்வதிலும், தனி மனித இடைவெளியை அந்தந்த மாநிலங்களில் அமல்படுத்துவதிலும் தங்களது பணிகளை சிறப்பாக ஆற்றிவரும் மாநில சுகாதார அமைச்சர்களுக்கு தன்னுடைய பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியாவில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்திற்கு பற்றாக்குறையா?