உலகெங்கிலும் புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் உடலில் புகுந்து சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தி மூச்சை நிறுத்துகிறது.
இந்த கடுமையான சுவாசப் பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில் நோயெதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடிகள்) அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இதில் மருந்துகள் கண்டறியும் நிறுவனங்ள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இந்த ஆன்டிபாடி சோதனைகளை ஆர்டர் செய்ய முனைகின்றன. ஐரோப்பாவில் உள்ள ஜெர்மன் நிறுவனமான யூரோஇம்முன் (Euroimmun), அவர்களின் சோதனையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் விற்க அனுமதிக்கும் சான்றிதழைப் சமீபத்தில் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஆன்டிபாடி சோதனை தயாரிப்பு மேலாளரான கான்ஸ்டான்ஸ் ஸ்டிபா கூறுகையில்,"ஆன்டிபாடி கண்டறிதல் தொடர்பாக, குறிப்பாக மருத்துவ பணியாளர்கள் எல்லோரும் இப்போதே பைத்தியம் பிடித்தவர்கள் போல் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே வைரஸ் இருந்ததா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார்.
நோய் காரணமாக சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை ஏற்படுவதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளுக்கு மேலும் அழுத்தம் ஏற்படுகிறது.