தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட்-19: விடை கிடைக்காத ஏராளமான வினாக்கள்! பதில் தேடும் சிறப்புத் தொகுப்பு... - Corona virus

வைரஸ் (தீநுண்மி) தாக்குதலின் விளைவாக உருவாகும் ஆன்டிபாடிகள் நடுநிலையானவையா அல்லது இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால், பூட்டுதல் (ஊரடங்கு) விதிகளைத் தளர்த்துவது குறித்து சரியான முடிவை எடுக்க முடியாது. இது குறித்து அலசுகிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு.

COVID-19
COVID-19

By

Published : May 9, 2020, 4:56 PM IST

Updated : May 10, 2020, 8:56 AM IST

மீண்டவருக்கு ஆன்டிபாடி?

உலகின் பெரும்பாலான நாடுகள் கரோனா தீநுண்மியால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை விலக்கிக்கொள்ளவும், தளர்த்திக்கொள்ளவும் முயன்றுவருகின்றன. கரோனா தீநுண்மியிலிருந்து மீண்டவர்களுக்கு, 'நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்' என்கின்ற சான்றிதழ் வழங்குவது குறித்த விவாதங்கள் இப்போது எழுந்துள்ளன.

இத்தகைய, ஆன்டிபாடி சோதனையில் சான்றிதழ் வழங்கப்பட்டால்தான் கரோனாவிலிருந்து மீண்டதாக மீண்டும் பணியில் அமர முடியும் என்கிற நிலை உள்ளது. எனினும், கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்ட பிறகு, அவரின் உடல் அந்த தீநுண்மிக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கிக் கொள்ளும் என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.

இதனால், நோயெதிர்ப்புச் சக்தி சான்றிதழ் வழங்கும் திட்டத்துக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவளிக்கவில்லை. இது குறித்து விரிவான விவாதங்கள் நடத்தப்படவேண்டியுள்ளன.

  • கரோனா போன்ற தீநுண்மியை எதிர்கொள்ள உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியின் முக்கியப் பொறுப்பு என்ன?
  • நோயின் தீவிரத்தை குறைக்க நோயெதிர்ப்புச் சக்தி எவ்வாறு உதவுகிறது?
  • கரோனா தீநுண்மிக்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும்?
  • மற்றவர்களைப் பாதிக்குமா?

இது போன்ற பல கேள்விகளில் கிடைக்கும் விடைகளின் அடிப்படையில்தான் பூட்டுதலை (லாக்டவுன்) தளர்த்துவது சரியானதொரு முடிவாக இருக்க முடியும். கரோனா நோய்த்தொற்றுக்கு ஒருவர் ஆட்பட்டால், உடனடியாக உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தி வேலைசெய்ய தொடங்கும்.

தீநுண்மியுடனான யுத்தம்!

மைக்ரோபேஜஸ் எனப்படும் வெள்ளை அணுக்களை ஏவி, தீநுண்மியை உடலிலிருந்து அழிக்க உடல் முயற்சி செய்யும். வெள்ளை அணுக்கள் தீநுண்மியைச் சுற்றியிருந்து 5 முதல் 10 நாள்களுக்குள் அதனை அழிக்க முயலும்.

மறுபுறம் லிம்போஸைட்ஸ் எனப்படும் பி-வெள்ளை அணுக்களால் தயாரிக்கப்படும் ஆன்டிபாடிகளும் தீநுண்மியைச் சுற்றி அதன் உடல் அமைப்பை புரிந்துகொள்ள முயலுகின்றன. அதேபோல சில நியூட்ரல் ஆன்டிபயாடிகளும் தீநுண்மியின் செயல்பாடுகளை நிறுத்தி, அவற்றை அழிக்க முயலும்.

ரத்த அணுக்களின் நினைவில் தீநுண்மி

இதற்கிடையே டி- வெள்ளை ரத்த அணுக்கள் தீநுண்மியால் பாதிப்புக்குள்ளான செல்களைக் கண்டறித்து அவற்றை அழிக்கும். மேக்ரோபேஜ்கள், பி, டி-செல்களின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக, உடலில் நோய்க்கிருமிகள் நுழைந்தவுடனேயே உடலிலிருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தச் செயல்முறை மனித உடலில் நிகழ்ந்தவுடன் உடலிலுள்ள பி, டி செல்களில் நினைவு வைத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, அடுத்தமுறை இதேபோன்ற தீநுண்மி உடலுக்குள் நுழைந்தால் உடனடியாக பி, டி செல்கள் விரைவாகச் செயல்பட்டு தீநுண்மியை அழிக்க நோயெதிர்ப்புச் சக்திக்கு உதவுகின்றன.

மனித உடலைத் தாக்கும் தீநுண்மிகள் அடிப்படையின் நினைவாற்றலை பி, டி ரக ரத்த அணுக்கள் பெற்றிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, செல்களில் நினைவு வைத்துக்கொள்ளும் ஆயுள்காலம் தீநுண்மியைப் பொறுத்து மாறுபடும்.

தட்டம்மைக்கு வாழ்நாள் முழுவதும், இன்ஃபுளூயன்சா காய்ச்சலுக்கு சுமார் ஆறு மாதங்கள்வரை நினைவு வைத்துக்கொள்ளும் தன்மை இந்தச் செல்களுக்கு உண்டு. இந்த நேரத்தில் கோவிட்-19 தீநுண்மிக்காக நோய் எதிர்ப்புச் சக்தி எவ்வளவு காலம் இருக்கும் என்பது தெரியவில்லை. ஆனாலும், நமக்கு சில சமிக்ஞை குறிப்புகள் கிடைத்துள்ளன.

சார்ஸ், மெர்ஸ் ஆகிய தீநுண்மிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஒரு நோய்த்தொற்று கோவிட்-19 தீநுண்மி. சார்ஸ் தாக்கப்பட்டவரின் உடலில் இரண்டு ஆண்டுகளுக்கும் மெர்ஸ் பாதித்தவரின் உடலில் மூன்று ஆண்டுகளுக்கும் உடலில் ஆன்டிபாடி இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

கரோனாவின் தன்மை

மனிதர்களைத் தாக்கும் கரோனா தீநுண்மியிலிருந்து மற்றொரு சமிக்ஞை குறிப்பு கிடைத்துள்ளது. தீநுண்மி மிகக் கொடூரமானது அல்ல; உண்மையில், இந்தத் தீநுண்மிகள் நமது உடலில் சளியை மட்டுமே ஏற்படுத்துகின்றன. மனித உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்திகள் எந்தளவுக்கு அதற்கு எதிர்வினை செய்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. இதுதான் மனித உடலைத் தாக்கும் கரோனா தீநுண்மியின் தன்மை.

1970ஆம் ஆண்டில் 229 தீநுண்மி குறித்த ஆராய்ச்சியில் ஆன்டிபாடிகள் உருவாகின்றன என்றும் அவை ஓராண்டுக்கும் குறைவாகவே உடலில் செயல்பட்டன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஓராண்டு கழித்து சில அறிகுறிகள் தென்படுவதையும் காண முடிந்தது.

இதன்மூலம் ஆன்டிபாடி இல்லையென்றால், உடலில் நோயெதிர்ப்புச் சக்தி இல்லையென்று கருதிவிடக் கூடாது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஷாங்காயில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இதே பாணியிலான சிகிச்சை முறையே கரோனா தீநுண்மி தொற்றிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆன்டிபாடியின்றி குணமடைதல்

கோவிட் பாதித்த 175 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அதில், பெரும்பாலான மாதிரிகளில் 10 முதல் 15 நாள்களில் உடலில் நியூட்ரல் ஆன்டிபாடிகள் உருவாகி தீநுண்மியை அழித்துவிட்டன. ஒவ்வொரு மாதிரிக்கு சற்று வேறுபாடுகளும் இருந்தன.

இதில், 10 ரத்த மாதிரிகளில் ஆன்டிபாடி இல்லையென்பதும் ஆச்சரியமான விஷயம் ஆகும். இந்த நோயாளிகள் நல்லபடியாக குணமாகியும் விட்டனர். இந்த ஆராய்ச்சிக்கு மனித உடலின் நோயெதிர்ப்புச் சக்தியான டி-செல்கள் முக்கியப் பங்கு வகித்தன.

ஏற்கெனவே, நோய்த் தாக்கியவர்களைத் தீநுண்மி மீண்டும் தாக்கினாலும், அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தி எதிர்த்தாக்குதல் நடத்தி தீநுண்மியை அழித்தொழிக்கின்றன என்பதை இது நிரூபித்தது. இதனால், ஆன்டிபாடி அடிப்படையிலான சான்றிதழ் இங்கே தேவையில்லை. ஏனென்றால், சிலரின் உடலில் ஆன்டிபாடி இல்லாமலேயே குணமடைந்துள்ளனர்.

முக்கிய ஆட்சேபனை என்னவென்றால், ஆன்டிபாடி என்பது உடலுக்கு பாதுகாப்பு தருகிறது என்பது உண்மையாகவே இருந்தாலும், இந்தச் சோதனைகள் இன்னும் நம்பகத்தனமானவை என்பது நிரூபிக்கப்படவில்லை.

அதேபோல், தீநுண்மி தாக்குதலின் விளைவாக உருவாகும் ஆன்டிபாடிகள் நடுநிலையானவையா அல்லது இல்லையா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாவிட்டால், பூட்டுதல் (ஊரடங்கு) விதிகளைத் தளர்த்துவது குறித்து சரியான முடிவை எடுக்க முடியாது என்பதே நிதர்சனம்.

Last Updated : May 10, 2020, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details