தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி., தனிமைப்படுத்தல் முகாமில் 10 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

சித்தார்த் நகர்: உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள சௌராசி கிராம தொடக்கப்பள்ளி கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 10 மாத பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது.

quarantine Uttar Pradesh COVID-19 baby dies at quarantine centre தனிமைப்படுத்தல் முகாமில் 10 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு உத்தரப் பிரதேசத்தில் கோவிட்-19 பாதிப்பு
quarantine Uttar Pradesh COVID-19 baby dies at quarantine centre தனிமைப்படுத்தல் முகாமில் 10 மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு உத்தரப் பிரதேசத்தில் கோவிட்-19 பாதிப்பு

By

Published : Apr 13, 2020, 9:21 PM IST

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள சௌராசி கிராம தொடக்கப்பள்ளி கோவிட்-19 தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 10 மாத பச்சிளம் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்தது.

இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், “வியாழக்கிழமை மாலை குழந்தை தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை அம்மை நோய் போன்ற அறிகுறி ஏற்பட்டு மறுநாள் உயிரிழந்துவிட்டாள்“ என்றார்.
இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் தனிமைப்படுத்தப்பட்ட குழந்தையின் மரணம். இந்த குழந்தையின் பெற்றோர்கள் மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசம் வந்திருந்தனர்.

அவர்கள் கோவிட்-19 அறிகுறி காரணமாக தனிமைப்படுத்தப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இதுவரை ஐந்து பேர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details