தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய நீதிமன்றங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை சரியாக கையாளுகின்றன - ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில், மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் நீதிபதிகள் மேற்கொண்ட விசாரணைகளை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

Ravi Shankar Prasad
Ravi Shankar Prasad

By

Published : Jul 19, 2020, 10:28 PM IST

"கரோனா தொற்று காலத்தில் நீதிமன்றங்கள் விரைவாக டிஜிட்டல் தொழில்நுட்பங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தன. உச்ச நீதிமன்றம் 7,800 வழக்குகளும், உயர் நீதிமன்றங்கள் 1.75 லட்சம் வழக்குகளும், துணை நீதிமன்றங்கள் 7.34 லட்சம் வழக்குகளும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் மேற்கொண்டுள்ளது" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதேசமயம் மெய்நிகர் விசாரணை குறித்த காணொலியையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 38,902 கரோனா தொற்று உறுதியான நிலையில், தேசத்தின் மொத்த கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10லட்சத்து 77ஆயிரத்து 618ஆக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details