ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப. சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் முன்பிணைமறுத்த நிலையில், அதை எதிர்த்து அவரது தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ப. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை - ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு
டெல்லி: ப. சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
உச்ச நீதிமன்றம்
இந்த மனு நீதிபதிகள் பானுமதி, ஏ.எஸ். போபண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ முறைப்படி தெரிவிக்கும்.
அதனடிப்படையில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது. மேலும் சிதம்பரம் ஏற்கனவே கைதாகிவிட்டதால் மனு தள்ளுபடியாக வாய்ப்பு இருக்கலாம் என்றேகூறப்படுகிறது.