தமிழ்நாடு

tamil nadu

நீதிமன்ற கட்டணத்தை இனி ஆன்லைனில் செலுத்தலாம்!

By

Published : May 28, 2020, 11:51 AM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் நீதிமன்ற கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் முறையை தலைமை நீதிபதி தனபால் தொடங்கி வைத்தார்.

நீதிபதி தனபால் தொடங்கி வைக்கும் காட்சி
நீதிபதி தனபால் தொடங்கி வைக்கும் காட்சி

மின் நிர்வாக திட்டத்தின் கீழ், புதுச்சேரி அரசு 2012ஆம் ஆண்டில் மின் முத்திரைத்தாள் முறையை அறிமுகப்படுத்தியது. மின் முத்திரைத்தாள் என்பது வழக்கமாக பயன்படுத்தும் ஆவணங்களுக்கு பதிலாக முத்திரை வரி வசூலிப்பதற்கான ஒரு மாற்று வழியாகும். இது தொடர்பாக ஸ்டார்ட் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, பதிவுத் துறையில் முத்திரை வரி வசூலிக்க புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மின் முத்திரைத்தாள் முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், நீதிதுறை முத்திரை தாளுக்கான மின் முத்திரை முறை எனப்படும் நீதிமன்ற கட்டணங்கள், ஆன்லைனில் செலுத்தும் முறை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இதில், புதுச்சேரி தலைமை நீதிபதி தனபால் கலந்துகொண்டு இவ்வசதியினை தொடங்கி வைத்தார். பின்னர் இவ்விழாவில் பேசிய அவர், ”காகித முறை இல்லை என்பதால் இந்த முறை மூலம் அரசுக்கு செலவு குறையும், மேலும் ஸ்டாம்ப் பேப்பர் தட்டுப்பாடு விலை ஏற்றம் தடுக்கப்படும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில், சட்டத்துறை செயலர் ஜூலியட் புஷ்பா, தலைமை குற்றவியல் நீதிபதி தாமோதரன், மாவட்ட ஆட்சியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:முதல்முறையாக ஆன்லைனில் பிரமாண்ட மாநாடு: தெலுங்கு தேசம் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details