கடந்த 2009இல் 12 வயது சிறுவனை கடத்திக் கொன்ற வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
12 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு! - 12 சிறுவன் கொலை வழக்கு
டெல்லி: 2009இல் சிறுவனைக் கடத்தி கொடூரமாகக் கொன்ற நபருக்கு மரண தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
athdeath
அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, "சிறுவனைப் பணத்திற்காக கடத்தி கொன்ற சம்பவம் மிகவும் பயங்கரமானது; கொடூரமானதும்கூட. இத்தகைய வழக்கு மிகவும் அரிதானது ஒன்றாகும்.
குற்றவாளி காரின் கைப்பிடியால் சிறுவனைக் காயப்படுத்தி, கொன்று வீசியுள்ளார். இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்ட நபருக்கு, ஆயுள் தண்டனை வழங்குவது நிச்சயம் போதாது" என்றார். மேலும், கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.