நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடியான தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. முன்னதாக, தவறான விவரங்களுடன் இருந்த பட்டியலை nta.ac.in இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நீட் தேர்வில் பங்கேற்ற நிலையில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
நீட் தேர்வு முடிவுகள்: குளறுபடி திருத்தம், புது பட்டியல் வெளியீடு! - National testing agency
12:14 October 17
மாநில வாரியான தேர்ச்சி விவரம் குறித்த பட்டியலில் திரிபுரா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தேர்வு எழுதிய மாணவர்களைவிட அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் மட்டுமே நீட் தேர்வு எழுதிய நிலையில், 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக தேசியத் தேர்வு முகமை வெளியிட்ட பட்டியலில் அறிவித்திருந்தது.
அதேபோல, உத்தராகண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,301 பேர் தேர்ச்சியடைந்தாகப் பட்டியலில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து திருத்தப்பட்ட பட்டியல் தற்போது வெளியான நிலையில், அதில், திரிபுரா மாநிலத்தில் 3,536 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், உத்தரகாண்டில் 12,047 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் திருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆடு மேய்க்கும் தொழிலாளி மகன் நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை