இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை 84 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இருவர் வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, நோய் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக, மகாராஷ்டிராவில் 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மார்ச் மாதம் முழுவதும் பள்ளிகள் மூடப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ள நிலையில், கல்வி நிலையங்கள், திரையரங்குகள் ஆகியவை மூடப்படுவதாக தெலங்கானா அரசு அறிக்கை வெளியிட்டது.