தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் சோதனை - இந்திய விமான நிலையங்களில் 10 ஆயிரம் பயணிகளுக்கு கொரனோ வைரஸ் சோதனை!

டெல்லி: இந்திய விமான நிலையங்களில் சுமார் பத்தாயிரம் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சக செயலர் ப்ரீத்தி சூடான் தெரிவித்தார்.

Coronavirus Coronavirus scare, India screens 43 flights, 9156 passengers arriving from China
Coronavirus Coronavirus scare, India screens 43 flights, 9156 passengers arriving from China

By

Published : Jan 23, 2020, 7:33 AM IST

Updated : Jan 23, 2020, 8:02 AM IST

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலர் ப்ரீத்தி சூடான் கூறும்போது, “இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களான சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனோ வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுவருகிறது. அந்த வகையில் 43 விமானங்களில் வந்த ஒன்பதாயிரத்து 156 பயணிகளுக்கு இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

சீனாவில் கொரோனோ வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனோ வைரஸ் ஒட்டகங்கள், பூனைகள், வெளவால்கள் உள்ளிட்ட விலங்குகள் மூலமாகவும் பரவுகிறது.
இந்த வைரஸ் பாதித்தால் கடுமையான உடல்பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: கொரோனா வைரஸ் பீதி: சென்னை விமான நிலையத்தில் தீவிர சோதனை

Last Updated : Jan 23, 2020, 8:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details