கரோனோ வைரஸ் சீனாவில் தொடங்கி உலகின் பல்வேறு மூலைகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் உடனடியாக நிம்மோனியா காய்ச்சலை உருவாக்க்கி உயிரைப் பறிக்கும் தன்மைகொண்டதால், அனைத்து நாடுகளின் சர்வதேச விமான நிலையங்களிலும் பயணிகளுக்குத் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
குறிப்பாக, தெர்மல் இமேஜிங் சோதனை மூலம் உடல் வெப்பம் அதிகமுள்ள பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு வைரஸ் பாதிப்பிருந்தால், மேற்கொண்டு வெளியில் பரவாமலிருக்க தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் அப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், ஹைதராபாத் வந்த சீனாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு சாதாரண சளி, இருமல் ஆகியவை இருந்துள்ளன. சாதாரண இருமல் என்றபோதிலும், அவர் சீனாவிலிருந்து வந்துள்ளதால் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் தனித்துவமாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறார்.