தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா வைரஸ்: 70க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் அனுமதி - coronavirus

புதுச்சேரி: 70க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் அடிப்படையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

coronavirus
coronavirus meeting at Pondicherry

By

Published : Mar 10, 2020, 6:16 PM IST

Updated : Mar 10, 2020, 6:55 PM IST

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம், ஆரம்ப சுகாதார நிலையத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுச்சேரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் அறிகுறி பரிசோதனை செய்வது, மருத்துவம் செய்வது குறித்த நடைமுறைகள் குறித்து விவாதித்தனர்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார், 'புதுச்சேரியில் 70க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம்

ஆனால், யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், புதுச்சேரி விமான நிலையம் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் மருத்துவத் துறை சார்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது' என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கொரோனா: கர்நாடகாவில் உயிருடன் புதைக்கப்பட்ட 6 ஆயிரம் கோழிகள்

Last Updated : Mar 10, 2020, 6:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details